Monday, March 12, 2007

கருத்து சுதந்திர காவலாளி) மூஞ்சியில் கரி

போன வருசம் இந்த கருத்து சொதந்திர காவலாளிங்க தொல்லை தாங்க முடியலை, ஆளுக்காளு கருத்து சொதந்திர காவலாளிங்க ஆயி ஒரே இம்சை, சரி எழவு இருந்துட்டு போகுதுனா இவிங்க யாருக்குடே கருத்து சொதந்திரத்தை காக்குறாங்கனு பார்த்தா முக்காவாசி சினிமாகாரங்களாவே இருக்கு, சரி எழவு ஏதோ ஒன்னு இருந்துட்டு போகட்டும், போன வருசம் அய்யா சினிமாக்காரவங்களே உங்க படத்து தலைப்பை தமிழ்ல வைங்க, எழவு சொன்னாலும் சொல்லலைனாலும் சினிமா வயசு வித்தியாசமில்லாம எல்லார்கிட்டயும் போய் சேருது, அதனால கொஞ்சம் பொறுப்போட இருங்கனு சொன்னாங்க முதல்ல, இது என்ன எழவு சொல்லி தெரிய வேண்டுமா? ஆனா அது அவிங்களுக்கு தெரியலை அதனால தமிழ்பாதுகாப்பு இயக்கம் தொல்.திருமா, மருத்துவர் இராமதாசு எல்லாம் சொன்னாங்க, அப்பாலிக்கா கெளம்புனாங்க பாருங்க க.சு.கா ங்க(கருத்து சுதந்திர காவலாளிங்க), நீங்க சொல்றது தப்பு என்ன படத்துக்கு என்ன பெயர் வைக்கனும்னு அவங்களுக்கு தெரியும் (சரி ராசா அப்போ த.பா.இ., திருமா, இராமதாசு கருத்து சுதந்திரப்படி அவங்க சொன்னாங்க, அது அவங்க கருத்து சுதந்திரம் இல்லியா) அட அது கூட பரவாயில்ல இன்னும் சில க.சு.காங்க கெளம்பினாங்க, இன்னாடா வெசயம்னா படத்துக்கு பொருத்தமா பேர் வக்கிறாங்களாம், அந்த படத்துக்கு அந்த பேர் தான் பொருத்தமாம், இல்லினா படம் ஊத்திக்குமாம், இத்தியாதி இத்தியாதினாங்க....இப்பாலிக்கா இவிங்க மூஞ்சியில தான் கரி பூசுனாங்க, அப்போ பல இங்கிலிபிசு தலப்பு படத்துக்கு பொருத்தமானது, அத மாத்தக்கூடாது, பேருந்துனு சொன்னா யாருக்கு புரியும், 'பஸ்' னு சொன்னா எல்லாருக்கும் புரியும், வலைப்பதிவுல கூட ஏதோ ஒரு க.சு.காவலாளி "மும்பை எக்ஸ்பிரஸ்" ங்கறதை "மும்பை எக்ஸ்பிரசு" னு மாத்திட்டானு நக்கல் உட்டாரு, "BF" படத்தை "அஆ"னு மாத்துனதுக்கு நக்கல் உட்டாங்க இவிங்களுக்கு வச்சாங்க ஆப்பு, தமிழ்ல பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து அப்படினு முதல்வர் கருணாநிதி சொன்ன பிறகு "Something Something உனக்கும் எனக்கும்" படத்து பெயர் "ஏதோ ஏதோ உனக்கும் எனக்கும்"அப்படினு மாறிடுச்சி, "எம்டன் - மகன்" படத்து பெயர் "எம்-மகன்" ஆயிடுச்சி, இதெல்லாம் "சம்திங் சம்திங்", "எம்டன் - மகன்" ங்கிற பெயர்களை நன்றாக விளம்பரம் செய்துட்டு, படமும் வெளிவந்து பிறகு மாத்துனாங்க, அப்பாலிக்கா "ஜில்லுனு ஒரு காதல்" என்னடானா "சில்லுனு ஒரு காதல்" ஆயிடுச்சி, "காட்ஃபாதர்"னு ஒரு படம் எடுக்குறாங்களாம் அது பெயர் கூட தமிழ்பெயர்ல மாத்திட்டாங்களாம், இப்போ அப்படியே கொஞ்சம் பின்னால போனா நம்ம க.சு.காவலாளிங்க என்ன சொன்னாங்க இந்த ஆளுங்களுக்கு ஆதரவா, இப்போ இந்த ஆளுங்க என்ன செய்திருக்காங்க, படத்துக்கு பெயர் பொறுத்தம், பேருந்துனு சொன்னா புரியுமா பஸ்னு சொன்னா புரியும் இத்தியாதி, இத்தியாதி எல்லாம் டுபாக்கூர், இவிங்களுக்கு பணம் கிடைக்குமாங்கறது தான் வெசயமே, இப்போ படத்துக்கு பெயரே வைக்க கூடாது, 1,2 னு எண்கள் அதான் நெம்பர் மட்டும் தான் வைக்கனும், வைத்தால் பாதி செலவை அரசாங்கம் ஏத்துக்கும்னு சொல்லுங்க, ஒடனே அதையும் செய்வாங்க.வரிவிலக்கு கொடுத்தால் தமிழ் பெயர் வைக்கிறாய் என்றால் அது கருத்தளவில் தமிழ் பெயர் வைப்பது சரி என்றும் அதனால் அந்த படத்தின் வியாபாரத்திற்கு பாதிப்பு இல்லை என்று தானே பொருள், இதைத்தானேயா அன்று தமிழ் பாதுகாப்பு இயக்கம், திரு.தொல்.திருமா, மருத்துவர் இராமதாசு எல்லாம் சொன்னாங்க, அன்று படத்தின் பெயர் நன்றாக விளம்பரம் செய்தாகிவிட்டது, பேருந்துனா புரியுமா, "ஸ்" க்கு பதில் "சு" போட்டுக்கலாமா இத்தியாதி இத்தியாதி எல்லாம் கதறியவர்கள், இப்போது படம் வெளிவந்த பின்பு படத்தின் தலைப்பைமாற்றியிருக்கிறார்கள் "ஜில்" என்பது "சில்" ஆகிவிட்டது, ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்ட "காட்ஃபாதர்" படத்தின் பெயர் மாறிவிட்டது இதெல்லாம் க.சு.காவலாளிகளின் மூஞ்சியில் பூசப்பட்ட கரி தானே....அன்று தமிழில் தலைப்பு வைக்க சொல்லி வலியுறுத்தியபோது என்னென்ன காரணங்களையெல்லாம் சொல்லி முடியாது என்று சொன்னதோ அதே காரணங்கள் இன்றும் இருந்த போதும் அதையெல்லாம் விலக்கிவிட்டு இன்று வரிவிலக்கிற்காக படம் வெளியான பிறகும் கூட பெயர் மாற்றுகிறார்கள் என்றால் அன்று அவர்கள் தமிழில் பெயர் வைக்காததற்கு என்ன காரணம்? இன்று பணத்திற்காக மாற்றுபவர்கள் தமிழுக்காக ஏன் மாற்றக்கூடாது.இதற்கெல்லாம் வரி விலக்கு தந்துகொண்டிருந்தால் பிறகு குப்பைத்தொட்டியில் சரியாக குப்பையை கொட்டினால் ஊக்கத்தொகை, திருடாமல் இருக்க ஊக்கத்தொகை, சரியான வருமான கணக்கை சமர்பித்தால் நூறு விழுக்காடு வருமான வரிவிலக்கு(நூறு விழுக்காடு வருமான வரிவிலக்குனா எதுக்கு வருமான வரி கணக்கு காண்பிக்க வேண்டும்...) என்றெல்லாம் செய்ய வேண்டும், இதற்கு பதில் கர்நாடகத்தில் நேரடி மொழி மாற்று படங்களுக்கு 100% கூடுதல் வரி விதிப்பது போல தமிழில் படத்தின் பெயர் இல்லையென்றால் 100% கூடுதல் வரி என்று செய்திருக்கலாம், ஆனால் இதற்கும் உடனடியாக க.சு.காவலாளிங்க கிளம்பியிருப்பார்கள், கோடி கோடியாக சம்பாதிக்கும் திரைப்படகாரர்களுக்கு மேலும் வருமானம் பெற்று தருவதற்கு.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More