Saturday, March 10, 2007

தகவல் உரிமை சட்டத்தினால் ஏற்பட்ட பயன்

தகவல் உரிமை சட்டம் பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம், அதன் பயன்களைப் பற்றி அறிவோம். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதனை கையில் எடுத்து அநியாயம் நடக்கும் இடங்களில் கேள்வி கேட்டு இருக்கிறோம்.தில்லியில், சீமாபுரி என்னும் இடத்தில், 15 பேர் கொண்ட பெண்கள் குழு ஒன்று தங்கள் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியில் போராடி வெற்றி கண்டிருக்கிறார்கள். எந்த ஒரு பப்ளிக் பள்ளியும் 25 சதவீத இட ஒதுக்கீட்டை தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும். ஆனால் மேல் மட்ட மக்களின் குழந்தைகள் படிக்கும் இந்த பள்ளிகளில், ஏழை மக்கள் நெருங்க கூட முடியாது. சீமாபுரியில் வாழும் ஷபானா என்னும் பெண், இங்கு இருக்கும் ஒரு பள்ளியில் தன் குழந்தையை சேர்க்க விரும்பி பள்ளியை அனுகிய போது, விண்ணப்பத்தாள் குடுக்க கூட அவர்கள் தயார் இல்லை. ஆனால் சீமாபுரி பெண்கள் தங்கள் உரிமையை எதற்கும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. எனவே கல்விதுறை அதிகாரிகளிடம் முறையிட்டு, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, வென்று, இன்று 4 வயது நீத்து, தன் தாயாரின் முயற்சியால் நல்ல பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசையாம். 'பரிவர்தன்' என்ற ஒரு தொண்டு நிறுவனம் இவர்களுக்கு உதவி இருக்கிறது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More